மரை கழண்ட படங்களுக்கு மத்தியில் வந்த மறை போலும் படத்தை... மன்னிக்க பாடத்தை விமர்சிக்க மரை கழண்டது பேனா.
இதுவரையில் நான் விமர்சனம் எழுதியதில்லை, விமர்சனமாக. ஏன் என்று எண்ணி பார்க்கையில், சில படங்களை பார்த்து வந்த பிறகு என் சிந்தை வெளியில் "இது ஒரு படம்??? இதுக்கு ஒரு விமர்சனம்??? போய் புள்ளை குட்டிங்களை பார்த்து, படிக்க வைங்கடா... " என்றே எண்ணங்கள் தெறித்து விழுந்தது. ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு, "இது ஒரு படம். இதுக்கு ஒரு விமர்சனம். போய் புள்ளை குட்டிங்களை, பார்த்து படிக்க வைங்கடா " என்றே தெறித்தது. அதனாலே இந்த விமர்சனத்தை வைக்கிறேன்.
நாடோடிகள் யார்?
உண்மைக் காதலை நெஞ்சிலே சுமந்து, எதிர்வரும் நிதர்சன வாழ்வை சந்திக்கும் தைரியத்தை எண்ணத்திலே சுமந்து காதலியை ஒரு கையிலும் மறுகையில் உறுதுணையாக நட்பையும் பற்றி வீட்டை துறந்து, சமூகத்துள் நுழைகிறானே அவனே நாடோடி. அவனை சார்ந்தோர் நாடோடிகளாக பரிணமிக்கிறார்கள்.
எந்தக்காதலை? சுலபமாக வெல்ல வைத்திருக்கு இந்த நாகரிக சமூகம், ஜெயிக்க வைப்பதெல்லாம் நாடோடிகளே. மீறி சமூகத்தில் யாரேனும் வெற்றி தேடி கொடுத்தால் அவர்களும் நாடோடிகளாக்கப் படுகிறார்கள் சமூகத்தின் இதர அங்கத்தினரால். இப்படி ஒரு காதலை சேர்க்கபாடு பட்டு நாடோடிகளாக்கப்பட்ட நண்பர்களின் கதை இது.
நன்றிகள் பல:
"நாடோடிகள்" இதனை தலைப்பில் கொண்டு ஒரு பாடத்தை சமர்ப்பித்திருக்கிறார்கள் இந்தக் குழு. வாழ்க அவர்களின் முயற்சி மற்றும் வளர்க அவர்களின் உழைப்பு.
இதுவரை சினிமாக் காதலிகளின் முன்புறத்தையும், பின்புறத்தையும் மிகை படுத்தி காட்டிய "காமி"ராக்களின் மத்தியில் காதலின் முன்புறத்தையும், பின் புறத்தையும் மிகைப்படுத்தாமல் காட்டியது இந்தக்குழுவின் "கேம்"மிரா. நன்றி.
அதற்கு பின்னே, சேசிங் காட்சிகள் என்று, ஒரு ஷாட்டில் காரும் மறு லாங் ஷாட்டில் கம்பிரசர் உதவியோடு தூக்கி எறியப்படும் கார் என்று காட்டாமல் மிக அருமையாக காட்சி கட்டியதற்கும், கட்டியங்கூறி வாழ்தலாம். நன்றி.
நல்ல வேளை தலயோ தளபேதிகளோ இதற்குள் தலையை கொடுக்கவில்லை கொடுத்திருந்தால் நமது தலை உருண்டிருக்கும், தலைப்பும் "சாக்கடைகான்" என்றோ, "புலு" என்றோ மாறி இருக்கும் இந்த படத்தின் தலை எழுத்தும் மாறி இருக்கும் அப்படி மாறாமல் பார்த்து கொண்ட இயற்கைக்கும் நன்றி.
ஒரே ஒரு கேள்வி:
இந்த கேள்விக்கு யார் வேண்டும் என்றாலும் பதில் சொல்லுங்கள்.
அந்த முதல் சேசிங் காட்சியில், பரணிக்கு அடி விழுவது இடது காதில். ஆனால் அவருக்கு கட்டு போட்டிருப்பது வலது காதில். ஏன்? (நான் பார்த்ததில் தவறு இல்லையே... சரிதானே..?)
இதற்கு திரைத் துறையில் இருந்து விளக்கம் வந்தாலும் நல்லது.... அல்லது நமது சங்கத்து சிங்கம், அண்ணன் மருத்துவர் திரு.புருனோ கொடுத்தாலும் சரி.
கதை:
கண்டிப்பாக இருக்கிறது, அதனாலே கண்டிப்பாக உங்களால் முடிந்த திரைஅரங்கிற்கு சென்று காணுங்கள். நல்ல படம் வெல்லும் என்பதனை கதையாக்காமல் மெய்யாக்குங்கள்.
அலசலின் முடிவு::
மெர்குரி அலசலின் முடிவாக நான் கண்டது: இது தங்கம் தான். தங்கமே தான்.
Monday, June 29, 2009
Friday, June 19, 2009
Subscribe to:
Posts (Atom)